ஆன்மிகம்
இசக்கியம்மன்

முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா 2 நாட்கள் நடக்கிறது

Published On 2020-01-21 06:26 GMT   |   Update On 2020-01-21 06:26 GMT
முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா 2 நாட்கள் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் மலர் முழுக்கு விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந்தேதி மற்றும் 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

10-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 11-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம், 11 மணிக்கு பஜனை, மதியம் 1 மணிக்கு உச்சகால பூஜை, அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, மஞ்சள் நீராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பிற்பகல் 3 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணி முதல் 11 மணி வரை மலர் முழுக்கு விழா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை முப்பந்தல் இசக்கியம்மன் பக்தர்கள் சேவா சங்க தலைவர் கோலப்பன், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் பரமசிவம் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News