ஆன்மிகம்
சனிப்பெயர்ச்சி

2020-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது தெரியுமா?

Published On 2020-01-20 08:53 GMT   |   Update On 2020-01-20 08:53 GMT
திருக்கணித பஞ்சாங்கத்தின் படியே சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது. விகாரி வருடம் தை மாதம் 10-ம் தேதி அதாவது 2020 ஜனவரி 24-ம்தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படியே சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது. விகாரி வருடம் தை மாதம் 10-ம் தேதி அதாவது 2020 ஜனவரி 24-ம்தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2020 டிசம்பர் 26-ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது.

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். வாக்கியப்பஞ்சாகத்தின் படியே திருநள்ளாறு கோவிலில் பரிகார பூஜை செய்யப்படுகிறது.

பொதுவாக கோவில்களில் வாக்கியப்பஞ்சாங்கப்படியும், மக்களுக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின் படியும் கணிக்கப்படுகிறது.

சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது.

தனுசு ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார்.

சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார்.

சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர்.

கடந்த ஏழரை வருடமாக சனிபகவான் பிடியில் சிக்கி அல்லல்பட்டு வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஏழரை சனி முடிவடையும் ஆண்டாக இருக்கும்.
Tags:    

Similar News