ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா எப்போது?

Published On 2020-01-20 05:53 GMT   |   Update On 2020-01-20 05:53 GMT
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடப்பது எப்போது? என்பது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.
காரைக்கால் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவில் உலக பிரசித்திபெற்றது. இங்கு தனி சன்னதிகொண்டு சனீஸ்வரர் அருள்பாலிப்பது சிறப்புக்குரியது. எனவே சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக் கம். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது என்று தகவல் பரவி வருகிறது. இது பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது திருநள்ளாறு கோவிலுக்கு பொருந்தாது. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் இந்த முறைப்படி சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடி வருகின்றனர். சனீஸ்வரருக்கென்று தனி சன்னதி கொண்டுள்ள தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் வருகிற டிசம்பர் 27-ந் தேதி தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட உள்ளது.

இது குறித்து தர்பாராண்யேஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘காரைக்கால் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதிகொண்டுள்ள சனீஸ்வரர் கோவிலில் 2½ ஆண்டுக்கு ஒரு முறை தான் சனிபெயர்ச்சி நடைபெறும். வருகிற 27.12.2020 அன்று அதிகாலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது, சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News