ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிகிறார்கள்

Published On 2020-01-14 03:33 GMT   |   Update On 2020-01-14 03:33 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

16-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணியளவில், சுவாமி அலைவாயுகந்தபெருமான் பரிவேட்டைக்காக வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபம் செல்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பச்சை நிற மற்றும் காவி நிற ஆடைகளை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள்.
Tags:    

Similar News