ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலில் நாளை முதல் திருப்பாவை பாடப்படுகிறது

Published On 2019-12-16 09:02 GMT   |   Update On 2019-12-16 09:02 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் அதிகாலை 3 மணிக்கு பாடப்பட்டு சாமியை எழுப்பப்பட உள்ளது.
வைணவ திருத்தலங்களில் மார்கழி மாதம் 1-ந்தேதி முதல் அந்த மாதம் முழுவதும் சுப்ரபாதம் சேவை ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் எழுதிய திருப்பாவையை பாசுரம் பாடியபடி சாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் அதிகாலை 3 மணிக்கு பாடப்பட்டு சாமியை எழுப்பப்பட உள்ளது.

திருப்பாவை சேவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படுகிறது.

மார்கழி மாதம் நிறைவு பெறும் வரை (ஜனவரி 14-ந்தேதிவரை) திருப்பாவை சேவை நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து தை மாதம் பிறந்ததும் ஜனவரி 15-ந்தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடக்கும்.

தினந்தோறும் ஏகாந்த சேவையின் போது சீனிவாச மூர்த்திக்கு பூஜைகள் செய்யக்கூடிய நிலையில் மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்பட உள்ளது.
Tags:    

Similar News