ஆன்மிகம்
அங்காளம்மன் கோவில்

அங்காளம்மன் கோவிலில் கட்டப்படும் முடி கயிறு பயன்கள்

Published On 2019-12-07 08:50 GMT   |   Update On 2019-12-07 08:50 GMT
மேல்மலையனூர் உற்சவர் அம்மன் சன்னதியில் முடி கயிறு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கயிறு கட்டுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பூசாரி செல்வம் கூறியதாவது:-

இந்த கோவிலில் மஞ்சள், சிவப்பு, பச்சை, கருப்பு போன்ற வண்ணங்களில் முடி கயிறு என்ற பெயரில் பக்தர்களுக்கு கயிறு வழங்கப்படுகிறது. இந்த கயிறுகள் அணிவதால் பக்தர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மேலும் கண்திருஷ்டி விலகு வதோடு நவக்கிரகங்களின் அருள் கிடைக்கும். அதாவது மஞ்சள் கயிறு குரு பகவான் அருளும், சிவப்பு கயிறு செவ்வாய் பகவான் அருளையும், பச்சை புதன் பகவான் அருளையும், கருப்பு சனி பகவான் அருளையும் கொடுக்கிறது. இந்த கயிறுகள் அனைத்தும் அம்மன் மீது வைத்து வழங்கப்படுவதால் நவகிரகங்களின் அருள் கிடைக்கும். உற்சவர் அம்மன் சன்னதியில் இந்த கயிறு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News