ஆன்மிகம்
சிவன் நந்தி

தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் 24-ந்தேதி ராகு கால பிரதோஷம்

Published On 2019-11-22 05:11 GMT   |   Update On 2019-11-22 05:11 GMT
ராகு கேது, சனீஸ்வரர் பரிகாரதலமான தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு ராகு காலத்தில் பிரதோஷம் நடக்கிறது.
ராகு கேது, சனீஸ்வரர் பரிகாரதலமான தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு ராகு காலத்தில் பிரதோஷம் நடக்கிறது. அப்போது ராகு கேதுவிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அன்று அதிகாலை கணபதி ஹோமம், மதியம் 12 மணிக்கு ராகு கேதுவிற்கு ஹோமம், 9 வகை அபிஷேகம் செய்யப்பட்டு ராகு கேது தோஷம் உடையவர்களுக்கு ஹோம வழிபாடும் தீபாராதனையும், 1 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு ராகு காலத்தில் காளத்தியப்பருக்கும், நந்தி பகவானுக்கும் அபிஷேகம், அலங்காரமும், தொடர்ந்து ராகு கேதுவிற்கு ஒரே நேரத்தில் அபிஷேகம், அலங்காரமும் நடக்கிறது. திருவாசகம், சிவபுராணம், தேவாரம் பாடப்பட்டு, சிவனுக்கு அலங்கார தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்ன பிரதாசமும் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News