ஆன்மிகம்
ஸ்ரீமன் அய்யா நாராயண சுவாமி

காட்கோபர் ஸ்ரீமன் அய்யா நாராயண சுவாமி நிழல் தாங்கலில் நாளை கார்த்திகை திருவிழா தொடக்கம்

Published On 2019-11-21 05:51 GMT   |   Update On 2019-11-21 05:51 GMT
காட்கோபர் ஸ்ரீமன் அய்யா நாராயண சுவாமி நிழல் தாங்கலில் கார்த்திகை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
மும்பை காட்கோபர் மேற்கு நித்தியானந்த் நகர் பகுதியில் உள்ள அகர சிவகோபுரம் துலங்கும் வைகுண்டரின் அழகுபதி ஸ்ரீமன் அய்யா நாராயண சுவாமி நிழல் தாங்கலில் கார்த்திகை திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி டிசம்பர் மாதம் 1-ந்தேதி வரை நடக்கிறது. நிகழ்ச்சியின் முதல் நாளில் அதிகாலை 5 மணிக்கு அய்யாவின் திருக்கொடி ஏற்றப்பட்டு உகப்படிப்பு பணிவிடை நடக்கிறது.

இரவு 7 மணி முதல் 11 மணி வரை திருஏடு வாசிப்பு நடைபெறும். 29-ந்தேதி மதியம் 2 மணி அளவில் திரு ஏடு வாசிப்பு மாலை 6 மணிக்கு அய்யாவின் திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு அனுமார் வாகன பவனி, அதனைத்தொடர்ந்து கணேஷ் மைதானத்தில் அன்னதானம் நடக்கிறது.

30-ந்தேதி மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, 4 மணிக்கு திருவிளக்கு பணிவிடை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கணேஷ் மைதானத்தில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், மகளிர் விளையாட்டு போட்டி, இலவச கல்வி தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து கவிஞர் செந்தூர் நாகராஜனின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் இறுதி நாளான டிசம்பர் 1-ந்தேதி காலை 7 மணிக்கு உகப்படிப்பு, வாகன பவனி, மதியம் 12 மணிக்கு உச்சி பணிவிடை, மாலை 7 மணிக்கு பட்டாபிஷேகத்தோடு அய்யாவின் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News