ஆன்மிகம்
திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் குரு பூஜை

Published On 2019-11-20 08:06 GMT   |   Update On 2019-11-20 08:06 GMT
திருவதிகை தலத்தில் ஒவ்வொரு மாதமும் சதயம் நட்சத்திரம் தினத்தன்று திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
திருநாவுக்கரசரின் குரு பூஜை ஆண்டு தோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் நடைபெறும். திருவதிகை தலத்தில் திருநாவுக்கரசருக்கான பூஜை மிக, மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் சதயம் நட்சத்திரம் தினத்தன்று திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன. மேலும் இத்தலத்தில் திருநாவுக் கரசர் நீண்ட நாட்கள் வாழ்ந்ததால், அவரது வரலாற்றை நினைவு கூறும் வகையில் சித்திரை மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் திருநாவுக்கரசரின் வரலாற்று நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இந்த 10 நாட்களும் திருநாவுக்கரசரை வழிபட்டால் பெரும்பேறுகள் கிடைக்கும். இத்தலத்தில் தான் தெப்ப உற்சவத்தின் போது ஈசனுக்கு பதில் சிவனடியாரான திருநாவுக்கரசர் தெப்பத்தில் சென்று வருவார்கள். தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இந்த அற்புதத்தை காணமுடியாது.
Tags:    

Similar News