ஆன்மிகம்
திருவையாறில் இன்று ஐப்பசி கடைமுழுக்கு விழா

திருவையாறில் இன்று ஐப்பசி கடைமுழுக்கு விழா

Published On 2019-11-16 05:23 GMT   |   Update On 2019-11-16 05:23 GMT
திருவையாறில் இன்று ஐப்பசி கடை முழுக்கு விழா நடக்கிறது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடுகிறார்கள்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாத்துக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஐப்பசி மாதம் துலா மாதம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையது. மக்கள் தாங்கள் செய்த பாவங்களை போக்குவதற்காக கங்கையில் சென்று நீராடி புனிதம் பெறுவர். ஆனால் கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புன்னிய நதிகளும் 3 கோடி தேவர்களும் காவிரியில் முழ்கி தங்களது பாவத்தை போக்கி கொண்டதாக புராணங்களில் கூறப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. திருவையாறில் ஐப்பசி கடைமுழுக்கு விழா இன்று(சனிக் கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். காலை 11 மணிக்கு தர்மசம்வர்த்தினி அம்மனுடன் ஐயாறப்பர் புஷ்யமண்டப படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால் திருவையாறு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News