தென்னம்பாக்கம் அழகுமுத்து ஐய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி கோவில் திருப்பணி வருகிற 6-ந்தேதி தொடங்க உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்றது. இதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையேற்று, இந்து சமய அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது.
இதையொட்டி, கோவில் வளாகத்தில் செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கும்பாபிஷேக விழாவுக்கான திருபணி வேலைகளை தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வருகிற 6-ந்தேதி (அடுத்தமாதம்) திருப்பணியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் கணக்காளர் சரவணன் மற்றும் ஜோதி, மகேஷ் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.