ஆன்மிகம்
அன்னாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த காட்சி.

100 கிலோ பச்சரிசி சாதத்தால் பாடலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

Published On 2019-11-13 04:57 GMT   |   Update On 2019-11-13 04:57 GMT
100 கிலோ பச்சரிசி சாதத்தால் பாடலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஐப்பசிமாத பவுர்ணமியையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு 100 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் மூலவர் லிங்கத்தின் மீது சிவபெருமானின் முகம் வரையப்பட்டிருந்தது, பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாவே இருந்தது.

பின்னர் இரவு 10 மணியளவில் அலங்காரம் பிரிக்கப்பட்டு, அன்னத்தை எடுத்து கோவில் முன்புள்ள சிவகர தீர்த்தத்தில் கரைக்கப்பட்டது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பரம்பொருள் இறைவன் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11 மணியளவில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இதில் கடலூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News