ஆன்மிகம்
ஆலங்குடி

ஆலங்குடி என்று பெயர் வரக்காரணம்

Published On 2019-11-07 06:57 GMT   |   Update On 2019-11-07 06:57 GMT
நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஸ்தலத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வரக்காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு பகவான் வீற்றிருக்கும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.

இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் இருந்து அருள்கிறார். இங்கு தட்சிணாமூர்த்தி விசேஷமானவர் என்பதால், இதனை ‘தட்சிணாமூர்த்தி தலம்’ என்பார்கள். தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.

வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால், இந்த திருத்தலத்திற்கு ‘ஆலங்குடி’ என்று பெயர் வந்தது.
Tags:    

Similar News