ஆன்மிகம்
கழுகாசலமூர்த்தி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்ற பின்னர் தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

கழுகாசலமூர்த்தி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

Published On 2019-11-07 03:41 GMT   |   Update On 2019-11-07 03:41 GMT
பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கழுகாசலமூர்த்தி-தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தச‌‌ஷ்டி திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5-ம் நாளில் தாரகாசூரனை சுவாமி வதம் செய்தார். 6-ம் நாளில் சூரபத்மனை சுவாமி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. 7-ம் நாளில் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. 8-ம் நாளில் சுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூஞ்சப்பரத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று, தபசு மண்டபத்தில் தபசுக்காட்சி நடைபெற்றது.

9-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் கோவில் தெற்கு வாசலில் கழுகாசலமூர்த்தி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 10-ம் நாளான நேற்று இரவில் கழுகாசலமூர்த்தி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பெரிய பல்லக்கிலும், சோமஸ்கந்தர் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

11-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்தச‌‌ஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News