ஆன்மிகம்
சக்கரத்தாழ்வார்

மூலவராக சக்கரத்தாழ்வார் காட்சி தரும் கோவில்

Published On 2019-11-06 07:00 GMT   |   Update On 2019-11-06 07:00 GMT
கரிசூழ்ந்தமங்கலம் திருத்தலத்தில், உற்சவர் அலமேலுமங்கா சமேத வெங்கிடாஜலபதியாகவும், மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் காட்சியளிக்கின்றனர்.
பொதுவாக அனைத்து வைணவத் தலங்களிலும் மூலவராக பெருமாள் தான் இருப்பார். ஆனால் கரிசூழ்ந்தமங்கலம் திருத்தலத்தில், உற்சவர் அலமேலுமங்கா சமேத வெங்கிடாஜலபதியாகவும், மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் காட்சியளிக்கின்றனர்.

ஒரே சுதர்சன சக்கரத்தில் முன்புறம் 16 திருக்கைகளுடன் கூடிய மகா சுதர்சன மூர்த்தியாகவும், பின்புறம் நான்கு திருக்கரத்திலும் சக்கரம் ஏந்திய நிலையில் யோக நரசிம்மராகவும் மூலவர் காட்சியளிப்பது இத்திருக்கோவிலின் சிறப்பு அம்சமாகும். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை ரோம மகரிஷி வழிபாடு செய்துள்ளார்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைப் போல முதலில் கொடிமரமும், அடுத்து பலி பீடமும் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கு பிரகார மூலையில் கேரளக் கோவில்களைப் போன்று பலிபீடமும் இருக்கிறது. சக்கரத்தாழ்வார் மீது எண்ணெய் சாத்தி அபிஷேகம் செய்தச் சில மணி நேரங்களில் மூலவர் விக்கிரகத்தின் மேல் எண்ணெய் பசையே இருக்காது. இந்த கோவில் சுக்ரன் அம்சம் கொண்டது.

சனிக்கிழமைகளில் இத்தல இறைவனுக்கு பகவானுக்கு பானகம் செய்து வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

Tags:    

Similar News