ஆன்மிகம்
சுந்தர மகாலிங்கம்

சாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் காட்சி தரக்காரணம்

Published On 2019-10-22 07:54 GMT   |   Update On 2019-10-22 07:54 GMT
சதுரகிரி மலையில் வீற்றிருக்கும் சுந்தர மகாலிங்கம் சிறிது சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இதற்கு ஒரு காரணம் உண்டு. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
சதுரகிரி மலையில் வீற்றிருக்கும் சுந்தர மகாலிங்கம் வழக்கமான சிவலிங்கம் போல் இருப்பதில்லை. சிறிது சாய்ந்த நிலையில் இங்கு சுந்தர மகாலிங்கம் காட்சி தருகிறார். இதற்கு ஒரு காரணம் உண்டு.

துறவி வேடத்தில் வந்த சிவபெருமான் சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட காவலன் பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான்.

அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். இதன் காரணமாக தான் இங்குள்ள சுந்தர மகாலிங்கம் அடிபட்ட தழும்புடன் சாய்ந்த நிலையில் இருப்பதாக புராணம் கூறுகிறது.

Tags:    

Similar News