ஆன்மிகம்
ஆண்டாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

ஆண்டாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2019-10-21 05:36 GMT   |   Update On 2019-10-21 05:36 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 7 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடை பெறும். 7 நாட்களும் ஆண்டாள் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன்படி இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் தொடங்கியுள்ளது.

உற்சவம் தொடங்கியதையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னாருடன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உற்சவ ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News