ஆன்மிகம்
சீரடி சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி

சீரடி சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி

Published On 2019-10-17 06:01 GMT   |   Update On 2019-10-17 06:01 GMT
பொற்றையடி சீரடி சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் சீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் உள்ளது. சாய்பாபா சமாதியான நாளன்று சாய்பாபா உருவ சிலையின் பாதத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தகல்லில் அபூர்வ சூரிய ஒளி விழுவது வழக்கம். இந்த ஆண்டு அபூர்வ சூரியஒளி விழும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை திருநடை திறப்பும், தொடர்ந்து ஆனந்த சாயி பஜனை குழுவினரின் பஜனையும், பகலில் தியானமும் நடந்தது.

பின்னர் சாய்பாபா உருவ சிலையின் பாதத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்த கல்லில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இந்த சூரிய ஒளி 3 நிமிடம் நீடித்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சூரிய ஒளியை கண்டு வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பொற்றையடி சீரடி சாய்பாபா ஆலய டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News