ஆன்மிகம்
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம்

Published On 2019-10-14 06:48 GMT   |   Update On 2019-10-14 06:48 GMT
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஐப்பசி விசு திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், அலங்காரம், அபிஷேகம், வீதிஉலா நடைபெறுகிறது.

விழாவின் 5-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.20 மணிக்கு விநாயகர், முருகன், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மன் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தொடர்ந்து முருகன், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மன் ஆகிய சுவாமிகளின் தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்பட்டன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழா வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. 
Tags:    

Similar News