ஆன்மிகம்
திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் நிறைமணி காட்சி

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் நிறைமணி காட்சி

Published On 2019-10-14 06:46 GMT   |   Update On 2019-10-14 06:46 GMT
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் கருவறை மற்றும் முன்பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், இனிப்பு வகைகள் என அனைத்து வகைகளும் பையில் கட்டி தொங்க விடப்பட்டது.
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று நிறைமணி காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவில் கருவறை மற்றும் முன்பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், இனிப்பு வகைகள் என அனைத்து வகைகளும் பையில் கட்டி தொங்க விடப்பட்டது.

இவை பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பது போல் இருந்தது. நாம் வேண்டியது நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், உலகில் உள்ள ஜீவராசிகள் பசி, பட்டினி இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவும், மழை, இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதை வேண்டி இவ்வாறு செய்திருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் கடைசி நாளில், தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்படும். பின்னர் இவை பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பழங்கள், காய்கறிகளை முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.
Tags:    

Similar News