ஆன்மிகம்
திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன

திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன

Published On 2019-10-12 08:44 GMT   |   Update On 2019-10-12 08:44 GMT
நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை சென்றடையும்.
திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவுக்காக குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

அங்கு பூஜைகள் முடிந்த பின்பு அவை மீண்டும் யானை மற்றும் பல்லக்கில் குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டன. நேற்று முன்தினம் சாமிசிலைகள் நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவில் வந்தடைந்தன. நேற்று நெய்யாற்றின்கரையில் இருந்து புறப்பட்டு குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை வந்தன.

அவற்றுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்கியது. அங்கிருந்து இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை சென்றடையும். பின்னர் அங்கிருந்து அந்தந்த கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.
Tags:    

Similar News