ஆன்மிகம்
குலசை முத்தாரம்மன்

குலசை கோவிலில் தினம், தினம் நடக்கும் திருமணங்கள்

Published On 2019-10-10 06:14 GMT   |   Update On 2019-10-10 06:14 GMT
குலசை முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் அற்புதங்களில், பக்தர்களுக்கு நடத்தப்படும் திருமணமும் ஒன்றாகும். தினம், தினம் இங்கு திருமணம் நடப்பது போல புதுமண ஜோடிகளை மாலையும், கழுத்துமாக பார்க்கலாம்.
குலசை முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் அற்புதங்களில், பக்தர்களுக்கு நடத்தப்படும் திருமணமும் ஒன்றாகும். தினம், தினம் இங்கு திருமணம் நடப்பது போல புதுமண ஜோடிகளை மாலையும், கழுத்துமாக பார்க்கலாம்.

முகூர்த்த நாட்களில், கேட்கவே வேண்டாம் குலசை தலத்தில் எங்கு பார்த்தாலும் திருமண ஜோடிகளாகத்தான் தென்படுவார்கள். சாதாரண ஏழைகளில் இருந்து கோடீசுவரர்கள் வரை எல்லா தரப்பினரும் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். மற்ற கோவில்களில் நடத்தப்படும் திருமணத்துக்கும், குலசை முத்தாரம்மன் தலத்தில் நடத்தப்படும் திருமணத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

பொதுவாக சக்தி தலங்களில் அம்மன் சன்னதி பகுதியில் திருமணம் நடத்தமாட்டார்கள். கோவில் அருகில் அல்லது கோவிலுக்குள் ஏதாவது ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறும். பிறகு மணமக்கள் கோவிலுக்குள் சென்று மூலவரை வணங்குவார்கள். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் அத்தகைய வழக்கம் இல்லை. மணமகளும், மணமகனும் அம்மன் எதிரில் கிழக்கு நோக்கி நின்று மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார்கள். முத்தாரம்மன் அருளால் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்ற ஐதீகப்படி இந்த திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

சில முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமண ஜோடிகள் வந்து விடுவார்கள். அப்போது அம்மன் எதிரே ஒவ்வொரு ஜோடியும் 2 அல்லது 3 நிமிடங்கள் நின்றபடியே தாலி கட்டி அம்மன் ஆசி பெற்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்கிறார்கள். முத்தாரம்மன் கண் பார்வையில் திருமணம் செய்து கொள்ளும் கணவன் - மனைவி இருவரும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். அவர்களுக்கு நிறைவான செல்வமும், குழந்தை பாக்கியமும் உண்டாகும்.

திருமணம் தவிர திருமணத்துக்கு பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் வைபவத்தை கூட இந்த பகுதி மக்கள் குலசை முத்தாரம்மன் தலத்தில் மேற்கொள்கிறார்கள். அவற்றில் பெரும்பாலனவை திருமணத்தில் முடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News