ஆன்மிகம்
சரஸ்வதி தேவி

யாகத்தைக் காப்பவள் சரஸ்வதி தேவி

Published On 2019-09-24 06:51 GMT   |   Update On 2019-09-24 06:51 GMT
வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி தேவி, யாகத்தைக் காப்பவளாக திகழ்கிறார். யாகத்தின் இறுதியில் கூறப்படும் ‘சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிப்பதாகும்.
வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி தேவி, யாகத்தைக் காப்பவளாக திகழ்கிறார். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவராகவும், இனிய வாழ்க்கையை கொடுப்பவராகவும் உள்ளார். கல்விக்கும், கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவர் சரஸ்வதி. யாகத்தின் இறுதியில் கூறப்படும் ‘சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிப்பதாகும். வீடுகளில் சரஸ்வதியை வழிபாடு செய்தால் துன்பங்கள் விலகி ஓடும். இன்பம் பெருகும்.

வீணை இல்லாத சரஸ்வதி

* வேதாரண்யம், கங்கைகொண்ட சோழபுரம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் கையில் வீணை இல்லாத சரஸ்வதியை தரிசனம் செய்யலாம்.

* புஷ்கர் மற்றும் கண்டியூரில் வீணை இல்லாமல் பிரம்மதேவனுடன் இணைந்து இருக்கும் சரஸ்வதியை வழிபாடு செய்ய முடியும்.

* திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோவிலில் கோஷ்ட தேவதையாக அருள்பாலிக்கும் சரஸ்வதி வீணை இல்லாமல் காட்சி தருகிறார்.

மாணவியாக கலைமகள்

சிருங்கேரியில் சரஸ்வதி தேவியானவள், மாணவி உருவத்தில் படிக்கின்ற கோலத்தில் அருள்பாலிக் கிறார். அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், இந்த தேவியை வழிபட்ட பின்னரே, பள்ளிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

புனிதமான சாம்பல்

மும்பையில் உள்ள மும்பாதேவி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் அமர்ந்து அம்பிகை காட்சியளிக் கிறார். இங்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேங்காய் உடைத்து, அதன் நீரை அம்பிகையின் வாகனத்தில் ஊற்றி விடுகின்றனர். நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோமத்தின் சாம்பலை புருவத்தில் பூசிக்கொள்கின்றனர்.

தொகுப்பு:- நெ.ராமன், சென்னை.
Tags:    

Similar News