ஆன்மிகம்
பசுக்களுக்குத் தீமை செய்தல் கூடாது

பசுக்களுக்குத் தீமை செய்தல் கூடாது

Published On 2019-09-21 09:10 GMT   |   Update On 2019-09-21 09:10 GMT
பசுவின் குருதியானது ஒரு துளி இப்புவியில் விழுந்தாலும் அதிலிருந்து பல கோடி அசுரர்கள் வந்துதித்து உலகை நாசம் செய்வர் என்று வேதம் கூறுகிறது.
பசுக்களை ஓட்டிச் செல்லும் போது சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடு பலாசங்கோலினை மெல்ல ஓங்கி போ போ என்று ஓட்டிச் செல்ல வேண்டும். இரக்கமின்றி கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்தில் வீழ்வர். பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூஜை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வார்கள்.

பசுவின் குருதியானது ஒரு துளி இப்புவியில் விழுந்தாலும் அதிலிருந்து பல கோடி அசுரர்கள் வந்துதித்து உலகை நாசம் செய்வர் என்று வேதம் கூறுகிறது. எனவே பசுக்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்தல் கூடாது. குற்றமற்ற பசுக்களை இடபத்தை சிவசந்நிதிக்கும் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும் வேண்டும்.

இளைத்த பசுவை வாங்கி வளர்த்தலும் பெரும் புண்ணியம் தரும். பசுவைக் கொன்றவனும், கொலைக்காகக் கொடுத்தவனும், அதன் இறைச்சியைத்தின்றவனும் துயரில் அழுந்துவார்கள். எனவே பசுக்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதை நாம் தடுக்க வேண்டும். கோயிலுக்குச் செல்பவர்கள் கோயிலின் பசு மடத்திலுள்ள பசுக்களுக்கு அகத்திக் கீரை, பசும்புல், பழங்கள் உள்ளிட்ட தீவனங்களை அளிக்க வேண்டும். நோயுற்ற பசுக்களுக்கு சிகிச்சைக்கான செல வினையும் ஏற்றுக் கொண்டால் நாமும் ஆரோக்கியமான வாழ்வைக் பெறலாம்.
Tags:    

Similar News