ஆன்மிகம்
உடுப்பி கிருஷ்ணன் கோவில்

கதவே இல்லாத கண்ணன் கோவில்

Published On 2019-09-12 05:34 GMT   |   Update On 2019-09-12 05:34 GMT
கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறார். வலது கையில் தயிர் கடையும் மத்தும், இடது கையில் வெண்ணையும் ஏந்தியுள்ளார். தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.

அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள். அந்த விக்கிரகமே உடுப்பியில் வழிபாட்டில் உள்ளது.
இந்த கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு. கர்ப்பகிரகத்தின் நுழைவு வாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனைத் தரிசிக்க முடியும்.
Tags:    

Similar News