ஆன்மிகம்
நாகராஜா கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபாடு செய்தபோது எடுத்த படம்.

நாகராஜா கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

Published On 2019-09-09 06:35 GMT   |   Update On 2019-09-09 06:35 GMT
ஆவணி 4-வது ஞாயிற் றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தென் தமிழகத்தில் நாக வழிபாட்டுக்கு புகழ்பெற்ற ஸ்தலமாக நாகராஜா கோவில் திகழ்கிறது. நாகர்கோவிலின் மைய பகுதியில் அமைந்துள்ள நாகராஜா கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதே போல ஆவணி 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாகராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கே திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின.

நாகராஜரை வழிபட குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண் களும், பெண்களும் திரளாக வந்திருந்தனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்ததால் நாகராஜா கோவிலில் கூட்டம் அலை மோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை தரிசனம் செய் தனர். முன்னதாக அங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ்சள் வைத்தும் வழிபாடு செய்த னர்.

பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு நாகராஜா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவம் நடக்காமல் தடுக்க கோவிலில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News