ஆன்மிகம்
குங்குமம்

மங்களச் சின்னம் குங்குமம்

Published On 2019-08-26 07:51 GMT   |   Update On 2019-08-26 07:51 GMT
குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.
தூய்மையான மஞ்சள், எலுமிச்சை, படிகாரம் ஆகியவற்றின் பக்குவக் கலவையால் தயாரிக்கப்படுவதே செந்நிற குங்குமம். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது. குங்குமத்தினால் முகம் களை பெறும்.

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். பெண்களின் நெற்றியின் முன் வகிடில் லட்சுமி தேவி உறைவதாகக் கூறுவர். நடுவகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால் பெண்கள் பிற ஆடவனின் மனதில் ஆசையைத் தூண்டாதவாறு தடுக்க முடியும்.

குங்குமம் அணிந்துள்ள மங்கையரை எத்தனை ஆண்கள் பார்த்து மோகித்தாலும் அவளை பிறர் அடைய முடியாது. அதனால் மங்கையின் கற்பு நிலைபெறும். ஹிப்னாடிசம், மெஸ்மரிசம், பிறர் சக்தி நம் மேல் ஏவுதல் போன்றவற்றை குங்குமம் அணிவதனால் மட்டுமே தடுத்திட முடியும் என்பது ஆராய்ந்தவர்களின் கூற்றாகும்.

இத்தகைய குங்குமத்தை அம்மனுக்கு அபிஷேகப் பொருளாய் பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டு சக்தி திருக்கோவில்களில் மகாலட்சுமியும், சக்தியும் வாசம் புரிகின்றனர் என்பர் சான்றோர். நீறுடன் குங்குமம் அணிவோருக்கு சோம்பல் இல்லை. தோல்வியில்லை. சுறுசுறுப்பும் வெற்றியும் கிடைக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

குங்குமம் அணிந்து அன்னையின் கடாட்சம் பெறலாம்

குங்குமத்தை மோதிர விரலால் தான் இட வேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பெண்கள் தமது நடு நாசியில் சுவாசம் இருக்கும் போது குங்குமம் இடுதல் மங்கல்ய விருத்தியைத்தரும். ஸ்ரீலட்சுமிதேவி உறையும் மூன்று இடங்களான மாங்கல்யம், நெற்றி, தலை வகிடின் ஆரம்பம் ஆகிய 3 இடங்களிலும் குங்குமத்தை இடுதலே உத்தமமானது.

குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கையில் மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால்தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.
Tags:    

Similar News