ஆன்மிகம்
ஜோதிடம்

மூன்று வித ஆஸ்ரய யோகங்கள்

Published On 2019-08-24 08:55 GMT   |   Update On 2019-08-24 08:55 GMT
ஒருவரது பிறப்பு ஜாதக ரீதியாக அனைத்துக் கிரகங்களும் மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ஆகிய சர ராசிகளில் அமர்ந்திருக்கும் நிலையில் ரஜ்ஜூ யோகம் உண்டாகிறது.
ரஜ்ஜூ யோகம்

ஒருவரது பிறப்பு ஜாதக ரீதியாக அனைத்துக் கிரகங்களும் மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ஆகிய சர ராசிகளில் அமர்ந்திருக்கும் நிலையில் ரஜ்ஜூ யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். பலரும் தங்கள் வாழ்வில் பெரும்பாலான காலகட்டத்தை வெளிநாட்டில் செல வழிக்கும்படியான சூழல் ஏற்படும். மனதில் ஒரு உத்வேகத்துடன் செயல் புரிந்து தனது செல்வம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை உயர்த்திக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள்.

முஸலம் யோகம்

அனைத்துக் கிரகங்களும் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் அமர்ந்த சுய ஜாதகத்தை கொண்டவர்களுக்கு முஸலம் என்ற யோகம் ஏற்படுகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் விசேஷ தன யோகம் கொண்டவர்கள். தனது கொள்கையில் பிடிவாதமாக இருப்பதுடன், ஈடுபடும் தொழில்களில் வெற்றி காணும் வரை ஓயாமல் செயல்படுவார்கள்.

நளம் யோகம்

ஒருவரது சுய ஜாதக ரீதியாக எல்லாக் கிரகங்களும் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய உபய ராசிகளில் இருக்கும் போது நளம் என்ற யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள், தெளிவான சிந்தனை கொண்டவர்களாகவும், உறுதியான மனதுடனும் செயல்படுவார்கள். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவதால் தன யோகத்தை அடையும் திறன் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
Tags:    

Similar News