ஆன்மிகம்
ஜோதிடம்

இரண்டுவித தள யோகங்கள்

Published On 2019-08-24 08:15 GMT   |   Update On 2019-08-24 08:15 GMT
சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.
ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிட மேதை வராகமிகிரர் எழுதிய ‘பிருஹத் ஜாதகம்’ என்ற நூலில் பல யோகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில், தள யோகங்கள் இரண்டு மற்றும் ஆஸ்ரய யோகங்கள் மூன்று ஆகியவை பற்றிய விளக்கங்கள்: மாலா மற்றும் சர்ப்பம் என்பவை இரு வகையான தள யோகங்கள் ஆகும்.

மாலா யோகம்

ஒருவரது சுய ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் எனப் படும் லக்னம், 4, 7, 10 ஆகிய வீடுகளில் சுபக்கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு, சுக்ரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் மட்டும் அமர்ந்திருக்கும் நிலையில் மாலா என்ற யோகம் ஏற்படுகிறது. அவற்றில் பாவக்கிரகங்கள் என்ற சூரியன், செவ்வாய், சனி மற்றும் தேய்பிறை சந்திரன் ஆகியவை இருப்பது கூடாது. அத்தகைய மாலா யோகத்தில் பிறந்தவர்கள், முன்னேற்றத்துக்கான வழிகளை கையாண்டு, வாழ்வில் தங்களுக்கென்று ஒரு இடத்தை எளிதாக அடைவார்கள்.

சர்ப்பம் யோகம்


லக்னம், 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் பாவக் கிரகங்கள் மட்டும் அமர்ந்திருந்து, சுபக் கிரகங்கள் மற்ற இடங்களில் இருந்தால் அது சர்ப்பம் என்னும் யோகமாக சொல்லப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் தங்களது சொந்த உழைப்பை மட்டுமே சார்ந்து செயல்பட வேண்டியதாக இருக்கும். மத்திய தர யோகம் இதுவாகும். 
Tags:    

Similar News