ஆன்மிகம்
கண்ணன் பாதம்

கிருஷ்ண ஜெயந்தியன்று வீடுகளில் கண்ணன் பாதம் வரைய காரணம்

Published On 2019-08-23 09:45 GMT   |   Update On 2019-08-23 09:45 GMT
நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணெயினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணர் ஆயர்பாடி பெண்கள் வைத்துள்ள வெண்ணெயை திருடும்போது வெண்ணெய் கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும்.

இதை வைத்தே கண்ணன் வெண்ணெய் திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்களாம். இருப்பினும், கோபப்பட மாட்டார்கள். கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும். செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணெயினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.
Tags:    

Similar News