ஆன்மிகம்
கிருஷ்ணன்

கிருஷ்ண தரிசனம்

Published On 2019-08-22 06:27 GMT   |   Update On 2019-08-22 06:27 GMT
கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவற்றைப் படைத்து அவரை வழிபடுவது சிறப்பானது.
கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவற்றைப் படைத்து அவரை வழிபடுவது சிறப்பானது.

துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கிருஷ்ணனுக்கு, ‘துவாரகீசன்’ என்று பெயர் உண்டு. ‘ஜகத் மந்திர்’ என்று அழைக்கப்படும் அந்த ஆலயத்தின் பிரதான வாசலின் பெயர் ‘சொர்க்க துவாரம்.’ அது எந்த நேரமும் திறந்தே இருக்கும். அதைத்தாண்டி சென்றால் ‘மோட்ச துவாரம்’ வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கிருஷ்ணரின் தரிசனம் கிடைக்கும்.

பிரபலமான உடுப்பி கிருஷ்ணர் கோவிலில், பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும்போது, அவற்றுடன் மரத்தாலான மத்து ஒன்றை வாங்கும் பழக்கம் பக்தர்கள் மத்தியில் இருந்து வருகிறது. உடுப்பியில் பகவான் அன்னப் பிரம்மம் ஆகவும், பண்டரிபுரத்தில் நாதப்பிரம்மம் ஆகவும் காட்சி அளிப்பதாக ஐதீகம்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் வேணுகோபாலன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள வேணுகோபாலன் சிலை, நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்கிராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று இங்கு பெருமாளுக்கு கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.
Tags:    

Similar News