ஆன்மிகம்
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி ஊர்வலம் புறப்பட்டு சென்ற போது எடுத்த படம்.

திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி ஊர்வலம்

Published On 2019-08-19 05:51 GMT   |   Update On 2019-08-19 05:51 GMT
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டு சென்றது.
மணவாளக்குறிச்சி, மணக்காட்டுவிளையில் பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்ப காவடி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் காலையில் தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, நையாண்டி மேளம், இரவு 7 மணிக்கு காவடி பூஜை, 7.30 மணிக்கு வேல் தரித்தல், 9 மணிக்கு தீபாராதனை போன்றவை நடந்தன.

நேற்று அதிகாலை 5 மணிக்கு காவடி கட்டுதல், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு காவடி பவனி, பகல் 11 மணிக்கு சமபந்தி விருந்து போன்றவை நடந்தது.

மாலை 3 மணிக்கு பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பகாவடிகள் ஊர்வலம் மணக்காட்டுவிளையில் இருந்து புறப்பட்டது. ஊர்வலம் பரப்பற்று, படர்நிலம், மண்டைக்காடு, கூட்டுமங்கலம், மணவாளக்குறிச்சி, வெள்ளமோடி வழியாக திருச்செந்தூர் நோக்கி சென்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News