ஆன்மிகம்
முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

Published On 2019-08-14 06:19 GMT   |   Update On 2019-08-14 06:19 GMT
முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் இசக்கியம்மன் கிழக்கு கோவிலில் ஆடி கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவில் திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை போன்றவை நடந்தது. நேற்று காலையில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் போன்றவை நடந்தன. பின்னர், ஆரல்வாய்மொழி சந்திப்பில் உள்ள மாரி முத்தாரம்மன் கோவிலில் இருந்து முப்பந்தல் கோவில் வரை பால்குட ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம், பறக்கும் காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு, பக்தர்கள் வேல்குத்து நிகழ்ச்சி போன்றவை இடம் பெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தபடி கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பகல் 11 மணிக்கு அன்னதானம், மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு உச்சிகாலபூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் இசை நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு பூப்படைப்பு மற்றும் சிறப்பு தீபாராதனை, நள்ளிரவு ஊட்டு படைப்பு, தொடர்ந்து பூக்குழி இறங்குதல் போன்றவை நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News