ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த காட்சி.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்

Published On 2019-08-05 06:23 GMT   |   Update On 2019-08-05 06:23 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடந்தது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வைணவ திருத்தலங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இந்த கோவிலின் கோபுரம், தமிழக அரசின் முத்திரை சின்னமாகவும் உள்ளது. ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த பூரம் நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா நடக்கும்.

இந்த ஆண்டு கடந்த 27-ந்தேதி ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து 9 நாட்கள் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன. 5-ம் நாள் கருடசேவை நடைபெற்றது. 7-ம் நாள் திருவிழாவில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயன திருக்கோலத்தில் காட்சி அளித்தார். 9-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 4 மணிக்கு தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் எழுந்தருளினர். பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து பூரம் நட்சத்திரத்தில் காலை 8.05 மணிக்கு தேரோட்ட விழா தொடங்கியது. தேரோட்டத்திற்கு முன்னதாக ஐகோர்ட்டு நீதிபதிகள் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு தேர் சக்கரத்திற்கு பூஜை செய்யப்பட்டு தேங்காய் உடைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், மாவட்ட கலெக்டர் சிவஞானம், மாவட்ட நீதிபதி முத்துசாரதா, போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கோவில் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் காலை 10.25 மணிக்கு நிலையை வந்து தேர் அடைந்தது. தேருக்கு பின்னால் ராட்சத புல்டோசர்கள் தேரை தள்ளியபடி வந்தன.

ரோடுகளில் சக்கரம் பதியாமல் இருக்க இரும்பு பட் டைகள் போடப்பட்டு இருந்தன. தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது. சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்தது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெற்றது.
Tags:    

Similar News