ஆன்மிகம்
திருப்பைஞ்சீலியில் நீலிவனேஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.(

நீலிவனேஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்

Published On 2019-08-05 05:40 GMT   |   Update On 2019-08-05 05:40 GMT
திருப்பைஞ்சீலியில் நீலிவனேஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி உடனுறை நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் தினமும் காலை பல்லக்கிலும், இரவில் சேஷ வாகனம், கிளி, காமதேனு, ரிஷபம், அன்னம், யாளி போன்ற வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு தங்க குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடாகி கோவிலை வலம்வந்து வையாளி கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் விசாலாட்சி அம்மன் தேரில் எழுந்தருளினார். மதியம் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பைஞ்சீலி, மூவராயண்பாளையம், வாழ்மால்பாளையம், கவுண்டம்பட்டி, ஈச்சம்பட்டி, சுனைப்புகநல்லூர், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவில் திருச்சி புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.டி.சி.சேரன், ஒன்றிய செயலாளர் க.அன்புசெல்வம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கவுண்டம்பட்டி ஆர்.சி.எஸ்.கேபிள் ஆர்.செந்தில்குமார், ஈச்சம்பட்டி அ.தி.மு.க. பிரமுகர் பி.தியாகராஜன், ஸ்ரீ நம்பியப்பா திருமண மண்டப உரிமையாளர் டி.செல்வம், அரசு இ-சேவை மையம் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News