ஆன்மிகம்
வீரபத்திரர், சிவன்

சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்

Published On 2019-07-19 09:00 GMT   |   Update On 2019-07-19 09:00 GMT
சிவபெருமானின் உடலில் இருந்து வீரபத்திரர் தோன்றிய வரலாற்றையும், தட்சனை அழித்த கதையையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமான், தட்சனின் மகளாக பிறந்திருந்த தாட்சாயிணியை மணம் புரிந்தார். ஆனால் தன்னுடைய மருமகனுக்கு கிடைக்கும் மரியாதையைக் கண்டு தட்சனுக்கு பொறாமை ஏற்பட்டது. அதனால் தான் நடத்தும் மிகப்பெரும் யாகத்திற்கு சிவபெருமானை அழைப்பதை தவிர்த்தான் தட்சன். அதோடு அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தையும் தர மறுத்தான்.

அதே நேரம் தட்சனின் மிரட்டலுக்கு பயந்து, தேவர்கள் அனைவரும் அந்த யாகத்தில் பங்கேற்றனர். தன் கணவனை அழைக்காத தந்தையிடம் சென்று நியாயம் கேட்க நினைத்தார் தாட்சாயிணி. ஆனால் அங்கு செல்ல வேண்டாம் என்று சிவபெருமான் தடுத்தார். இருப்பினும் அவரது பேச்சை மீறிச் சென்ற தாட்சாயிணிக்கு அங்கு அவமானமே மிஞ்சியது.

எனவே “உன்னுடைய யாகம் சீர்குலைந்து போகட்டும்” என்று சாபம் விட்டபடி, யாக குண்டத்தில் விழுந்து உயிர் துறந்தார் தாட்சாயிணி. தன் மனைவி இறந்ததால் கோபம் கொண்ட சிவபெருமானின் உடலில் இருந்து வீரபத்திரர் தோன்றினார். அவர் தட்சன் யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று, தட்சனை அழித்ததோடு, அவன் நடத்திய யாகத்தையும் சீர்குலைத்தார்.
Tags:    

Similar News