ஆன்மிகம்
கஹல பரிவர்த்தனை யோகம்

கஹல பரிவர்த்தனை யோகம்

Published On 2019-07-19 05:36 GMT   |   Update On 2019-07-19 05:36 GMT
லக்னத்திலிருந்து, மூன்றாம் வீட்டுக்குடைய கிரகம் லக்னம், 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் அமரும் நிலையில், அந்த இடங்களுக்கு உரிய கிரகம் அல்லது கிரகங்கள் 3-வது வீட்டில் அமர்ந்து இருப்பது கஹல பரிவர்த்தனை யோகமாகும்.
லக்னத்திலிருந்து, மூன்றாம் வீட்டுக்குடைய கிரகம் லக்னம், 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் அமரும் நிலையில், அந்த இடங்களுக்கு உரிய கிரகம் அல்லது கிரகங்கள் 3-வது வீட்டில் அமர்ந்து இருப்பது கஹல பரிவர்த்தனை யோகமாகும். உபஜெயஸ்தானமான 3-ம் இடம் குறிப்பிடும் தைரியம் காரணமாக ஜாதகர் பல வெற்றிகளை பெறுவார்.

லக்ன அதிபதியும், 5-ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றவர்கள் புகழ் பெற்று விளங்குவதுடன், வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது புகழ் பல காலத்துக்கும் நிலைத்திருக்கும்.

ஒருவரது சுய ஜாதக ரீதியாக 2-ம் இடத்தின் அதிபதியும், 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், அவருக்கு வருமானம் பல வழிகளில் கிடைக்கும். படிப்படியாக பொருளாதார நிலை உயர்ந்து அந்தஸ்து கொண்டவராக மாறுவார்.

2-ம் இடத்தின் அதிபதியும் 9-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். சகல சவுபாக்கியங்களை பெறுவதுடன், வேதங்களை கற்றவராகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். பெரிய அளவிலான நண்பர்கள் வட்டாரம் இவர்களுக்கு உண்டு.

9-ம் வீட்டு அதிபதியும், 10-ம் வீட்டு அதிபதியும் பரிவர்த்தனை பெற்றவர்கள் அந்தஸ்து, அதிகாரம், புகழ், தெய்வபக்தி ஆகியவற்றைப் பெறுவார்கள்.
Tags:    

Similar News