ஆன்மிகம்
கீழ்ப்பாக்கத்தில் நடந்த தோப்பு உற்சவத்தில் எழுந்தருளிய தேவநாதசாமியை படத்தில் காணலாம்.

திருவந்திபுரம் தேவநாதசாமிக்கு தோப்பு உற்சவம்

Published On 2019-07-18 04:22 GMT   |   Update On 2019-07-18 04:22 GMT
திருவந்திபுரம் தேவநாதசாமிக்கு தோப்பு உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் உள்ளது. இங்கு ஆனி மாத பவுர்ணமியன்று ஆண்டு தோறும் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்ப்பாக்கம் பகுதியில் தோப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் தோப்பு உற்சவம் நடந்தது. இதையொட்டி தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து உற்சவர் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தோப்பு உற்சவ மண்டபத்திற்கு வந்து எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து மகா தீபாராதனை நடைபெற்றறு. தொடர்ந்து மாலையில் தேவநாத சாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங் கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்து சாமி வீதிஉலாவாக திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலை சென்றடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பட்டாச்சாரியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News