ஆன்மிகம்
நந்தி பகவான்

சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்

Published On 2019-07-13 06:16 GMT   |   Update On 2019-07-13 06:16 GMT
பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால், பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.
சங்கீத ஞானத்தில் சிறந்தவராக குறிப்பிடப்படும் நந்தியை, நடனம் மற்றும் இசைத்துறையில் உள்ளவர்கள் வழிபட்டால் கலையில் உன்னதமான நிலையை அடைவார்கள். நந்தியை வழிபடுபவர்களுக்கு பக்தியும், நற்குணங்களும் கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள்.

சகல காரிய சித்தி, உயர்ந்த பதவிகள் மற்றும் அனைத்திற்கும் மேலான முக்தி என்ற ஆன்ம விடுதலையை நந்தி எளிதாக அருள்வார். பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால், பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.

அருகம்புல் மாலையை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி நந்தியை வழிபடுவது, வில்வ இலைகளால் அலங்கரித்து அர்ச்சனைகள் செய்வது, அரிசியில் வெல்லம் கலந்து நிவேதனம் செய்வது ஆகியவை பல நன்மைகளை ஏற்படுத்தும். நவக்கிரகங்களால் பாதிக்கப்பட்ட ரிஷப ராசியினர் பிரதோஷ காலத்தில் நந்தியை ஆத்மார்த்தமாக வணங்கினால், வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.

Tags:    

Similar News