ஆன்மிகம்

இந்து சமயத்தின் வேதங்கள்

Published On 2019-06-25 06:33 GMT   |   Update On 2019-06-25 06:33 GMT
வேதம் என்பது இந்து சமயத்தின் அடிப்படை நூல்களாக பார்க்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தவர்கள் ரிக், யஜூர், சாம வேதங்களை மட்டுமே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
வேதம் என்பது இந்து சமயத்தின் அடிப்படை நூல்களாக பார்க்கப்படுகிறது. ‘வித்’ என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது வேதம். ‘வித்’ என்பதற்கு ‘அறிதல்’ என்பது பொருள். ‘வேதங்கள்’ என்பதற்கு ‘உயர்வான அறிவு’ என்று அர்த்தம். இந்து சமயத்தின் அடிப்படையாக நான்கு வேதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

அவை ரிக், யஜூர், சாம, அதர் வணம். ஆரம்ப காலத்தில் இருந்தவர்கள் ரிக், யஜூர், சாம வேதங்களை மட்டுமே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அதர்வண வேதத்தை தீமை என்று கருதியதாகவும் தெரிகிறது. பல புராணங்களை எழுதிய வியாசர் என்ற முனிவர் தான் அதர்வணத்தையும் வேதங்களில் ஒன்றாக இணைத்து அவற்றை நான்கு வேதங்கள் என்று ஆக்கியவர். அதன் காரணமாகத்தான் அவர் ‘வேத வியாசர்’ என்று அழைக்கப்படுகிறார்.

Tags:    

Similar News