ஆன்மிகம்

பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது

Published On 2019-06-20 04:16 GMT   |   Update On 2019-06-20 04:16 GMT
பூரணாங்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாகூர் அருகே உள்ள பூரணாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. விழாவையொட்டி தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.

அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி கரகத் திருவிழாவும், 2-ந் தேதி மாலை 5 மணியளவில் பகாசூரன் வதம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் அர்ச்சுனன் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 4-ந் தேதி அர்ச்சுனன் தவசு உற்சவமும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் நடக்கிறது. முன்னதாக 12 மணியளவில் படுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, இரவு 9 மணியளவில் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவின் நிறைவாக 7-ந் தேதி காலை 9 மணியளவில் தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. 
Tags:    

Similar News