ஆன்மிகம்

பெண் வடிவில் நவக்கிரகங்கள்

Published On 2019-06-19 07:46 GMT   |   Update On 2019-06-19 07:46 GMT
பாப்பாரப்பட்டியில் உள்ள அபீஷ்ட வரதராஜர் கோவிலில் உள்ள நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சி தருவதும் ஆச்சரியமான ஒன்றாகும்.
* பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னிதி இருப்பதில்லை. ஆனால், தருமபுரியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டி எனும் ஊரில் அமைந்திருக்கும் அபீஷ்ட வரதராஜர் கோவிலில் நவக்கிரகங்கள் உள்ளன. அதோடு அந்த நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சி தருவதும் ஆச்சரியமான ஒன்றாகும்.

* மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 600 வருடங்களுக்கும் மேலான கட்டுமானமாகவும், மிகவும் கலையம்சம் கொண்டதாகவும் இருப்பதுடன், கோவிலில் மொத்தம் 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

* வேலூர் அருகே விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தூணின் தென்பக்கத்தில் அரை சந்திர வடிவில் 1 முதல் 6 வரை மற்றும் 6 முதல் 12 வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டும்போது, குச்சியின் நிழல் எந்த எண்ணில் விழு கிறதோ அதுதான் அப்போதைய மணி ஆகும்.
Tags:    

Similar News