ஆன்மிகம்

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேக விழா

Published On 2019-06-19 03:38 GMT   |   Update On 2019-06-19 03:38 GMT
பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. அதன் பின்னர் 16 வகை தீபாராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி நேற்று அன்னாபிஷேக விழா நடைபெற்றது. அதையொட்டி அங்குள்ள முத்துக்குமாரசாமி மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்தயாகம் நடைபெற்றது.

இதையடுத்து சாயரட்சை பூஜையில் சிவன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை ஆகியோருக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் மற்றும் மஞ்சள் நிற அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரம் நடந்தது. இதைத்தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் 16 வகை தீபாராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் கோவில் கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் வருத்தமில்லா வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News