ஆன்மிகம்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது

Published On 2019-06-18 04:45 GMT   |   Update On 2019-06-18 04:45 GMT
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பஞ்சவடியில் உள்ள 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பஞ்சவடியில் உள்ள 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது. இந்தநிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் திருப்பதியில் திருமலை திருவேங்கடமுடையான்போல் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சிலை இங்கு கடந்த மே மாதம் 10-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆகம விதிப்படி கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவேண்டும்.

அதன்படி வருகிற 23-ந்தேதி 5 நிலை ராஜகோபுரம், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீராமன் மற்றும் 36 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதி விமானங்களுடன் புதியதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சன்னதி விமானத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகளான மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நேற்று காலை 9 மணி முதல் தொடங்கியது. மாலையில் பகவத் பிரார்த்தனை, அங்குரார்பணம், வாஸ்து சாந்தி நடந்தது.

நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு அக்னிமதனம் என்று சொல்லக்கூடிய இயற்கையான முறையில் (அரளிகட்டை மற்றும் கற்கள் கொண்டு நெருப்பு உருவாக்குதல்) அக்னி பட்டாச்சாரியார்களால் கடைந்து அதன் மூலம் பெறக்கூடிய அக்னியை கொண்டு வேள்விகள் நடத்த உள்ளனர்.
Tags:    

Similar News