ஆன்மிகம்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா

Published On 2019-06-17 03:54 GMT   |   Update On 2019-06-17 03:54 GMT
கன்னியாகுமரி ரெயில் நிலையம் சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது. பெண்கள் தட்டுகளில் மாங்கனிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
கன்னியாகுமரி ரெயில் நிலையம் சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாங்கனி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு குகநாதீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார் ஆகியோர் எழுந்தருளி கோவிலைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வாகனத்தின் முன் பெண்கள் தட்டுகளில் மாங்கனிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட குடும்பநல கோர்ட்டு நீதிபதி கோமதிநாயகம், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை தலைவர் கோபி, வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் பக்தர்களுக்கு மாங்கனிகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. 
Tags:    

Similar News