ஆன்மிகம்

திருவானைக்காவல் கோவிலில் தங்க கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்

Published On 2019-06-15 05:00 GMT   |   Update On 2019-06-15 05:00 GMT
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் தங்க கொடிமரத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் அகிலாண்டேஸ்வரி சன்னதி முன் 50 அடி உயரத்தில் தாமிர தகடுகள் பொருத்தப்பட்ட கொடிமரம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கொடிமரத்தின் மரம் மாற்றப்பட்டு புதிய தாமிர தகடுகள் பொருத்தி தங்க முலாம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

இந்த தங்க கொடிமரத்தின் கும்பாபிஷேகத்திற்கான முதல் யாகசாலை பூஜை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 8.15 மணிக்கு தங்க கொடிமரத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

Tags:    

Similar News