மனதுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைக்க சத் களத்திர யோகத்தை குறிக்கும் கிரக அமைப்புகள் ஒருவரது ஜெனன கால ஜாதகத்தில் பின் வருமாறு அமையவேண்டும்.
களத்திர ஸ்தானம் என்று சொல்லப்படும் ஏழாம் வீட்டுக்கு உடைய கிரகம் அல்லது களத்திரகாரகன் என்று சொல்லப்படும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் குரு அல்லது புதன் ஆகிய சுபக்கிரகங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு இணைப்பு பெறாத நிலையில் களத்திர ஸ்தானம் களத்திர ஸ்தான அதிபதி அல்லது சுக்கிரன் ஆகிய கிரகங்களை குரு அல்லது புதன் பார்வை செய்வது விஷேசம். இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் ஒருவருக்கு இருக்கும்பட்சத்தில் மனம் போல் மாங்கல்யம் என்ற வகையில் சத் களத்திர யோகம் ஏற்படும்.