ஆன்மிகம்

மாத்ரு தன யோகம்

Published On 2019-06-14 06:33 GMT   |   Update On 2019-06-14 06:33 GMT
ஒருவரது சுய ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியும் சுப நிலையில் இணைந்து இருப்பது அல்லது பரஸ்பரம் பார்வை செய்து கொள்வது ஆகிய அமைப்புகளில் மாத்ரு தன யோகம் உண்டாகிறது.
வாழ்வில் முன்னேற்றம் காண ஒருவரது சுய ஜாதகத்தின் குறிப்பிட்ட ஸ்தானங்கள் உதவியாக அமைகின்றன. அவற்றையும் ஜோதிடம் யோகமாக குறிப்பிடுகிறது. அவற்றில் முக்கியமானது மாத்ரு தன யோகம் ஆகும். அதாவது ஒருவரது பெற்ற அன்னையின் மூலம் பெறப்படும் பொருளாதார லாபத்தை அது குறிப்பிடுகிறது.

ஒருவரது சுய ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியும் சுப நிலையில் இணைந்து இருப்பது அல்லது பரஸ்பரம் பார்வை செய்து கொள்வது ஆகிய அமைப்புகளில் மாத்ரு தன யோகம் உண்டாகிறது. இரண்டாம் வீடு என்பது பண வரவை குறிக்கும் இடமாகவும் நான்காம் இடம் என்பது பெற்ற அன்னையை குறிப்பிடும் இடமாகவும் உள்ள நிலையில் இரண்டு வீடுகளும் தொடர்பு பெறும்போது இந்த யோகம் ஏற்படுகிறது.

சம்பந்தப்பட்ட கிரகங்கள் தொடர்பு பெறும் இடங்கள் நல்ல பலன்களை அளிக்க வேண்டுமானால் அவை 6812 ஆகிய ஸ்தானங்களுடன் தொடர்பு பெறுவது கூடாது என்று ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News