ஆன்மிகம்

14 ஆண்டுகள் நித்திரையிலேயே காலத்தை கழித்த ஊர்மிளா

Published On 2019-06-13 07:50 GMT   |   Update On 2019-06-13 08:12 GMT
ராமனும், லட்சுமணனும் வனவாசம் முடிந்து வரும் வரை ஊர்மிளா நித்திரையிலேயே காலத்தைக் கழித்தாள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
ராமபிரானின் மனைவி சீதாதேவி சகோதரிதான் ஊர்மிளா. அவளை ராமனின் சகோதரனான லட்சுமணன் திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் கைகேயி பெற்ற வரத்தால் ராமன் காட்டிற்கு செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணனும் கூட புறப்பட்டனர்.

இதனால் ஊர்மிளா அயோத்தியிலேயே தங்கினாள். தன்னுடைய கணவனைப் பிரிந்து தான் எப்படி இருக்கிறோம் என்று அவர் மனக்கவலையில் இருந்தார். அப்போது ராமனுக்கு காவலாக இருந்த லட்சுமணன், தனக்கு தூக்கம் என்பதே இருக்கக்கூடாது என்பதற்காக, நித்ரா தேவியிடம் தன்னுடைய தூக்கத்தையும் சேர்த்து தன் மனைவி ஊர்மிளாவிடம் கொடுத்துவிடும்படி கூறினார்.

அதன்படி நித்ராதேவி, ஊர்மிளாவை தழுவிக் கொண்டாள். அதன் காரணமாக, துயரத்தில் தவித்து வந்த ஊர்மிளா, ராமனும், லட்சுமணனும் வனவாசம் முடிந்து வரும் வரை நித்திரையிலேயே காலத்தைக் கழித்தாள்.
Tags:    

Similar News