ஆன்மிகம்
பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியபோது எடுத்த படம்.

திருமலைக்குமாரசாமிசுவாமி கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது

Published On 2019-06-12 05:57 GMT   |   Update On 2019-06-12 05:57 GMT
பண்பொழி திருமலைக் குமார சுவாமி கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, நேற்று யாகசாலை பூஜை தொடங்கியது.
தென்காசி அருகே உள்ள பண்பொழியில் பிரசித்தி பெற்ற திருமலைக்குமார சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 நிலை கொண்ட ராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான திருப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி கடந்த 9-ந்தேதி அனுக்ஞை பூஜை களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று முன்தினம் லட்சுமி ஹோமம், தனபூஜை, கன்யா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் மூர்த்தி ஹோமம், சம்கிதா ஹோமம், பிரசன்னாபிஷேகம், பரிவார மூர்த்திகள் கலாகர்சணம், அக்னி சங்கிரகணம், மாலை யில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், ஆச்சார்ய ரக்‌ஷாபந்தனம், கும்ப அலங்காரம், மூலவர் கலாகர்சணம், யாத்ரா தானம், கடம் யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடந்தன.

பின்னர் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. நாளை மறுநாள் காலை 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திருமலைக்குமாரசுவாமி மற்றும் பரிவார தேவதை களுக்கு அபிஷேகம் நடைபெறு கிறது. மாலையில் தங்கத்தேர் உலாவும், இரவு 9 மணிக்கு சண்முகர்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம், ரதவீதிஉலாவும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணை யாளர் பரஞ்சோதி ஆலோசனையின்படி, தக்கார் செல்லத்துரை, உதவி ஆணை யாளர் அருணாச்சலம், ராஜகோபுர உபயதாரர்கள் அருணாச்சலம், பரமேஸ்வரி அருணாச்சலம் ஆகியோர் செய்து வருகிறார்கள். 
Tags:    

Similar News